ஜி.கே.வாசன் (பிறப்பு: டிசம்பர் 28, 1964) தமிழ்நாட்டு அரசியல்வாதி தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பணியாற்றியவர். தற்போது தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் தலைவராக உள்ளார். ஜி.கே.வாசன் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் ஜி. கே. மூப்பனார், தாயார் பெயர் கஸ்தூரி. சென்னை புதுக் கல்லூரியில் பி.ஏ. நிருவன செயலியல் பட்டம் பெற்றார். 29-11-1996 ல் சுனிதாவை திருமணம் புரிந்தார். காங்கிரஸ் கட்சியில் தனது தந்தையின் மரணத்திற்கு பின் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக பணியாற்றி பின்னர் அதனை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். பின்னர் தமிழக காங்கிரஸ்தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளராகவும், இருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக வெற்றி பெற்று ஒருமுறை மத்திய புள்ளிவிவரத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.சென்ற மத்திய கப்பல் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.


