கங்கைகொண்டான் துறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு
டெலஸ்கோப் பயிற்சி
திருநெல்வேலி அஸ்ட்ரோ கிளப் சார்பில் துறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவமாணவிகளுக்கு டெலஸ்கோப் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வானியல் கருத்துக்களை பரப்புவதற்கும்,தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவதற்கும் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்குஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆனந்த்ராஜ் தலைமைவகித்தார்.அறிவியல் ஆசிரியர் ராஜேஷ் வரி அனைவரையும் வரவேற்றார்.தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி செயற்குழு உறுப்பினர் முத்துசாமி மாணவர்களுக்கு வானியல் குறித்து பயிற்சி அளித்தார்.இதில் ஆசிரியர்கள் யமூனா உள்பட மாணவமாணவியர்கள் கலந்து கொண்டனர்.


