தூத்துக்குடியில் நாளை (அக்.29) பிஎஸ்என்எல் சார்பில் வாடிக்கையாளர்களின் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளது.
மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்க்கும் முகாம் நடத்தி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் குறைதீர்க்கும் நாள் முகாம் நாளை (அக்.29) தூத்துக்குடி பிஎஸ்என்எல் அலுவலக சேவை மையத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


