தூத்துக்குடியில் தனியார் மருத்துவமனை ஆக்கிரப்பில் உள்ள சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மூன்றாம் கேட் மேம்பாலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை சட்ட விரோதமாக மாநகராட்சி சாலையை ஆக்கிரப்பு செய்துள்ளது. மேம்பாலத்தில் போக்குவரத்து நெருக்கடியின் காரணமாக பாலத்தின் கீழ் உள்ள அணுகு சாலையில் பொதுமக்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாலத்திற்கு கீழ் உள்ள கரடுமுரடான சாலையில் டூ வீலர் மற்றும் கார்கள் மற்றும் பாதசாரிகள் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. அணுகு சாலையை விரிவாக்கம் செய்யாமல் மாநகராட்சி அதிகாரிகள் பாரபட்சமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த சாலைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான மேம்பாலத்தில் தனியார் மருத்துவமனையின் கூலிங் சீட் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


