தூத்துக்குடியில் உலக உணவு தினம் மற்றும் உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினம் நடைபெற்றது
தூத்துக்குடியில் எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம், மாவட்ட மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை மற்றும் அன்னம்மாள் பெண்கள் கல்வியியல் கல்லூரி ஆகியவை சார்பில் உலக உணவு தினம் மற்றும் உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினம் நடைபெற்றது.
உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினம் உறுதி மொழி சுவரொட்டியை எம்பவர் இந்தியா கௌரவ செயலாளர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் சங்கர் வெளியிட்டு தலைமையுரை ஆற்றினார். முதல் பிரதியை தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் பெற்றுக் கொண்டு கருத்துரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அபுல் காசிம் அவர்களின் 40 ஆண்டுகால பணியைப் பாராட்டி சிறப்பு விருது வழங்கப்பட்டது. அன்னம்மாள் பெண்கள் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜாய்சிலின் சர்மிளா வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் வரவேற்புரை ஆற்றினார்.
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை வழி நடத்தல் ஆலோசனைக்குழு உறுப்பினர் லலிதாம்பிகை நன்றியுரை கூறினார். சுகாதாரப் பணிகள் அலுவலக பணியாளர்கள் உணவுப் பொருள்களில் அயோடின் சத்து இருப்பதை கண்டறியும் ஆய்வை செய்து காட்டினர். பெண்கள் கல்வியியல் கல்லூரி பேராசிரியை சுதாகுமாரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் அன்னம்மாள் பெண்கள் கல்வியியல் கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.


