உலக போலியோ தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் பியர்ல் சிட்டி ரோட்டரி கிளப் சார்பாக கார் பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி அருகில் இருந்து கார் பேரணி திருநெல்வேலிக்கு புறப்பட்டு சென்றது. ரோட்டரி கிளப் முன்னாள் கவர்னர் சின்னத்துரை அப்துல்லா பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் போலியோவால் பாதிக்கப்பட்ட சுமார் 15 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டாா்கள். போலியோவால் பாதிக்கப்பட்ட கடைசி தலைமுறை என்பதை பறைசாற்றும் விதத்தில் இந்த பேரணி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பியரல்சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் முகமது இப்ராகிம், செயலாளாா் விக்னேஷ், கிளப் தலைவா் டாக்டா் ராமலிங்கம், மகளிா் தலைவி டாக்டா் புளோரா, செயலாளா் மலா், துனை ஆளுநா் சிவராமகிாிஷ்ண்ன், நிா்வாகிகள் பொதிகை கண்ணன், விஜயன், அபுதாமஷ் செந்தில்ஆறுமுகம், கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டாா்கள்


