தூத்துக்குடியில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய அமைச்சர் கீதாஜீவன் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி 59வது வார்டு சூசை நகர் பகுதியில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறியதால் பாசிபடிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து இன்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், உடனடியாக அங்கே சீரமைப்பு பணிகளை தனது சொந்த செலவிலேயே துவக்கி வைத்தார்.
ஆய்வின் போது, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, மாமன்ற உறுப்பினர் பட்சிராஜன் மற்றும் மாரிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


