தூத்துக்குடி அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது..
தூத்துக்குடி தெற்கு சம்மந்த மூர்த்தி தெருவில் உள்ள பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சுவாமி செல்வ விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 26 ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. இன்று காலை 5:45 மணிக்கு நான்காம் காலை யாகசாலை பூஜை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஒரு நாள் பகுதியாகி மகாதீபாரதனை நடைபெற்று.
காலை 8.30 மணிக்கு சுவாமி செல்வ விநாயகர் விமான கோபுரம் மற்றும் மூலஸ்தானம், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் மகாதீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் கீதா ஜீவன், திமுக மாநகரச் செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், திமுக மாவட்ட பிரதிநிதி பெருமாள் சக்திவேல், கோவில் நிர்வாக தலைவர் கங்கா ராஜேஷ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


