தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 10-வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் டூவிபுரம் இரண்டாம் தெருவில் அவரது திருவுருவப்படத்திற்கு பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆர் காசிலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் தங்க முருகேசன், எஸ்கேஆர் தனசேகரன், சுரேஷ்குமார், சிவலிங்கம், மணி, சமீர் அகமத், ஆத்தி, நைனா, சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


