நமக்கு நாமே திட்டத்தின் கீழ் குரும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
குரும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.30 லட்சம் செலவில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இயேசு விடுகிறார் ஊழிய பொதுமேலாளர் செல்வகுமார் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை ஆழ்வை யூனியன் சேர்மன் ஜனகரிடம் வழங்கினார்.
இதில் குரும்பூர் ஜமாத் தலைவர் அலாவுதீன், பொருளாளர் சேக் முகைதீன் பைஜூ, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் அப்பாஸ், ஜாசம், கசாலி, பைசல், நசீர், கமால், இயேசு விடுவிக்கிறார் சமூக ஒருங்கிணைப்பாளர் எட்வின், ஆழ்வை., யூனியன் ஆணையாளர் பாக்கியம் லீலா, அழகப்பபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி தலைமையாசிரியர் ஜெசிராணி நன்றி கூறினார்.


