கோவில்பட்டியில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த தவறி விழுந்த பெயின்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி தாமஸ் நகர் கைவண்டி தொழிலாளர் காலனி சேர்ந்தவர் செல்லையா மகன் செண்பகராஜ் (52). பெயின்டரான இவர், கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள கடையின் மாடியில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராமல் கீழே தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
அவருக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


