லோன்துரையின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பே அதாவது 20.9.1942 காலை 9 மணியளவில் திருநெல்வேலி போலீஸ் டெப்டி சூப்ரின்டென்ட் ராவ்பகதுர் டி.எம்.அப்பாத்துரை பிள்ளையும் ஒரு ரிசர்வ் போலீஸ் படையும் உடன்குடிக்குப் புறப்பட்டது. தூத்துக்குடி மாஜிஸ்திரேட் ஸ்ரீவைகுண்டத்திலுள்ள போலீஸ் படையுடன், சேர்ந்து கொண்டார். ரிசர்வ் போலீஸ் படை நண்பகல் 12 மணியளவில் உப்பளத்தை வந்தடைந்தது. டெப்டி சூப்ரின்டென்ட், டி.எம்.அப்பாத்துரை பிள்ளை ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருந்த விசாரணையை மேற்பார்வையிட்டார்.
அவருடன் வந்த ரிசர்வ் போலீஸ் உடன்குடி மற்றும் அதனைச் சுற்றியமைந்துள்ள அனைத்துக் கிராமங் களுக்குள்ளும் புகுந்து. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களின் வீடுகள், லோன்துரை கொலை வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் வீடுகள் மற்றும் அப்பாவிப் பொது மக்களின் இல்லங்கள் ஆகியவற்றைச் சோதனையிட்டனர். பலர் கைது செய்யப்பட்டனர். சோதனையிடப்பட்ட வீடுகளிலிருந்த பாத்திரங்கள், மற்றும் மண்பாண்டங்களை உடைத்து நொறுக்கினர். சிறுவர் முதல் முதியோர் வரை கண்ணில் கண்டவர்களையெல்லாம் ரிசர்வ் போலீஸ் படை அடித்துத் துன்புறுத்தியது. வெற்றிலைக் கொடிக்காலுக்குச் சென்றவர்களிடமிருந்த கத்தி மற்றும் வெட்டரிவாள் போன்றவற்றை ரிசர்வ் போலீசார் பறித்துக்கொண்டு போய்விட்டனர்.
ஊரில் இருந்தால் போலீஸ் நம்மையும் தாக்கும் என அஞ்சி ஆண்கள் அனைவரும் ஊரைக்காலி செய்துவிட்டு வெளியூர்களுக்குத் தப்பி ஓடத்துவங்கினர். சிலர் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று தங்கினர். மற்றும் சிலர் உவரி சுயம்பு லிங்கசாமி கோவிலில் சென்று தங்கினர். ஆயிரக்கணக்கான இந்திய இளஞ்சிங்கங்களை சுட்டு வீழ்த்திய வேளையிலும் இந்தியத் திருநாட்டில் வெள்ளையர்கள் சுதந்திரப் பறவைகளாகச் சுற்றித் திரிந்தனர்.
ஆனால் ஒரே ஒரு வெள்ளையன் கொலை செய்யப் பட்டதன் எதிரொலியால் நம்மவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் வீட்டை மறந்து விதி வீதியாக அலைந்தனர். இந்தக் கொடுமை தீ பிடித்துக் கொண்டிருந்த வேளையில் 26.9.1942 அன்று மேலும் இரண்டு போலீஸ் பட்டாளம் உடன்குடி பகுதிக்கு வந்தது. அதன் பின்னர் விசாரணை என்ற பெயரில் அப்பாவி பொதுமக்களை அடித்து உதைத்துத் துன்புறுத்தினர். கூலிவேலைக்குச் சென்று திரும்பிய ஏழைப்பெண்கள் பலரைப் போலீஸ் பட்டாளம் கற்பழித்தது. இந்தக் கொடுமைகள் லோன்துரை கொலைவழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படும் வரை நீடித்தது. ரிசர்வ் போலீஸ் துணையுடன் போலீசார் தீவிர விசாரணை நடத்திய பின்னர் ஆறுமுகநேரியைச் சேர்ந்த இராசகோபால், காசிராஜன், ஏ.எஸ், பெஞ்சமின், ஆர்.செல்லத்துரை, தர்மம் கோயில் பிள்ளை, கே. பொன்னையா நாடார், பி. நாராயணப்பிள்ளை, ரெத்தினசாமி என்ற பெருமான் நாடார். மகாராஜன் நாடார். தேவயிரக்கம் நாடார். கனிநாடார் நாடார். செல்லத்துரை, தங்கையா நாடார். ஆறுமுக நாடார். நாராயணன். நெல்லையப்ப சேர்வை, சிவந்திகண் என்ற முத்து மாலை நாடார், தங்கச்சாமி நாடார், மோட்டார் என்ற ரெத்தினசாமி, பூவலிங்கம் நாடார். மு.லெட்கமணன், தங்கையா என்ற ஆசிர்வாத நாடார், காசி நாடார், துரைச்சாமி நாடார், க. லட்சுமண நாடார். வி மந்திரக் கோள் ஆகிய 26 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த 26 நபர்களின் வீடுகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களின் பெற்றோரையும், உறவினர்களையும் அடித்து உதைத்து காவல் நிலையம் கொண்டு சென்று கொடுமைப்படுத்தினர். 26வது எதிரியாகச் சேர்க்கப்பட்ட மந்திரக் கோனாரின் இல்லம் உடன்குடி வைத்திலிங்கபுரத்தில் இருந்தது. அதை ரிசர்வ் படையினர் உடைத்து எறிந்தனர். அப்போது எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்ற வகையில் அவ்வூர் கிராம
முன்சீப் அங்குக் கட்டப்பட்டிருந்த பசு மாடுகளைக் கொண்டு சென்று விட்டார். உடன்குடி பகுதியில் காங்கிரஸை வளர்த்த படுக்கப்பத்து மேகநாதன் லோன்துரை கொலை வழக்கில் சம்பந்தப்படவில்லை. ஆனால் உடன்குடி பகுதியில் வெள்ளையர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணம் மேகநாதன்தான் என்பதை அறிந்த ரிசர்வ் போலிஸ் மேகநாதனின் வீட்டையும் இடித்துத் தரைமட்டமாக்கியது. லோன்துரை கொலைக்குப் பின்னர் போலீசாரின் நிலை இவ்வாறிருக்க, லோன்துரையைக் கொலை செய்த வீரர்கள் சித்தன்விளை பெரியநாடார் கூறிய ஆலோசனைப்படி தனித்தனியாகப் பிரிந்து சென்று தலைமறைவாகிவிட்டனர்.
இராசகோபால், காசிராஜன். ஒ.எஸ். பெஞ்சமின் ஆகிய மூவரும் பன்னம்பாறைக்குத் தென்மேற்கே உள்ள ஒரு காட்டிற்குள் தலைமறைவாக இருந்தனர். இவர்களுக்கு நண்பர் ஒருவர் மூலமாக பல அடுக்குகளைக் கொண்ட டிபன் கேரியர் மூலம் சாப்பாடு வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த ஒருவன் “காட்டுக்குள்ளே பல அடுக்கு டிபன் பாத்திரத்தில் சாப்பாடு செல்கின்றது. ஒருவேளை அது குலசேகரன் பட்டினத்தில் லோன்துரையைக் கொலைசெய்த கொலையாளிகளுக்காக இருக்கலாம்” என சாத்தான்குளம் போலீசில் கூறிவிட்டார். அந்தத் தகவலின் பேரில் 24.09.1942 அன்று நாங்குநேரி போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பி.கே. வரதாச்சாமி என்பவர் இராசகோபால், ஏ.எஸ். பெஞ்சமின், காசிராஜன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தார். 25.09.1942 அன்று ஆர்.செல்லத்துரையைக் குலசேகரன்பட்டினம் போலீஸ் சுப்பாநாயக்கர் கைது செய்தார். 8.11.1942 அன்று நாங்குநேரி உதவி போலீஸ் அதிகாரி ஆதிநாராயணதாஸ் மந்திரக்கோனாரை கோவில்பட்டியில் கைது செய்தார். கைதாகாமல் இருந்த வீரர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு
வந்த காரணத்தால் ஒவ்வொருவராக போலீசில் சரண் அடைந்தனர். கைது செய்யப்பட்டவர்களைப் போலீசார் அடித்து உதைத்துத் துன்புறுத்தினர். அவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலமும் வாங்கப்பட்டது.
போலீசாரின் துன்புறுத்தல் தாங்கமுடியாமல் சிலர் தாங்கள் லோன்துரையைக் கொலை செய்வதற்குப் பயன்படுத்திய ஆயுதங்களையும், உப்பளத்திலிருந்து கைப்பற்றிய பொருட்களையும் சித்தன்விளை பெரியநாடாரிடம் கொடுத்தோம் எனக்கூறிவிட்டனர். இதனால் குலசேகரன்பட்டினம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் இராமலிங்கப் பிள்ளையை சித்தன்விளை பெரியநாடாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் உயர் அதிகாரிகள் பணித்தனர், பெரிய நாடாருக்கும் உதவி ஆய்வாளருக்கும் நீண்டநாள் நட்பு இருந்தது. எனவே உதவி ஆய்வாளர் பெரிய நாடாரைக் காப்பாற்ற நினைத்து அவரது இல்லத்திற்குச் சென்று, “லோன்துரையின் கொலையில் உங்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும், தாங்கள் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், போலீஸ் அதிகாரிகள் கருதுகின்றனர். உங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு என்னைப் பணிக்கின்றனர். எளவே கொலையாளிகள் தங்களிடம் விட்டுச் சென்ற துப்பாக்கிகள் மற்றும் பொருட்களை உங்கள் ஊர்: அருகேயுள்ள கோவில்கினற்றுக்குள் போட்டுவிடுங்கள் பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன்” எனக் கூறிவிட்டார்.
இதனால் நாசித்தன்விளை பெரியதாடார் ‘ஊர் அருகேயுள்ள அய்யன் கோவில் கிணற்றுக்குள் ‘ தன்னிடமிருந்த ஆயுதங்களைப் போட்டுவிட்டார். முன்னரே அறிவித்தபடி, உதவி ஆய்வாளர் சித்தன்விளை பெரியதாடாரின் இல்லத்திற்குப் போலீஸ் படையுடன் வந்து விசாரணை நடத்தினார். அப்போது பெரியநாடார் “எனக்கும் லோன்துரை கொலை வழக்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களை நான் பார்க்கவும் இல்லை” எனக் கூறிவிட்டார். போலீசார் அவருடைய வீடு மற்றும் தோட்டம் முழுவதையும் சோதனை போட்டனர். பின்னர் ஒதுக்கு புறமாக இருந்த கோவிலின் கிணற்று அருகே சென்றனர். அங்கே சில தடயங்கள் கிடைத்தன. பின்னர் கிணற்றைச் சோதனையிட வேண்டும் என எண்ணினர், ஒரு ஆயில் மோட்டார் மூலம் கிணற்றில் உள்ள தண்ணீர் முழுவதையும் வெளியேற்றினர். கிணற்றுக்குள்ளிருந்த துப்பாக்கிகள் மற்றும் லோன்துரையைக் கொலை செய்யப்பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் கைப்பற்றி திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதனால் சித்தன்விளை பெரியதாடார் வழக்கிலிருந்து தப்பினார்.
லோன்துரை கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் கொலை நடைபெற்ற சமயத்தில் உப்பளத்திற் குள்ளிருந்த முதல் 6 சாட்சிகளையும் சிறைக்கு அழைத்து அடையாளங்களைக் காட்டச் செய்தனர். அவர்களால் யாரையும் சரியாக அடையாளம் கூற இயலவில்லை. ஆனால் போலீசார் போலி ஆவணங்களைத் தயார் செய்தனர், கைதுசெய்யப்பட்டவர்கள் முதன்முதலில் திருச்செந்தூர் சிறையிலும் பின்னர் வெவ்வேறு சிறையிலும் சிறை வைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி பி.வி. பாலகிருஷ்ணய்யர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. முதல் குற்றவாளியாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இராஜகோபாலுக்கு ஆதரவாக ஏ.எஸ். இராமானுஜம், ஏ.என். தேசிகாச்சாரியார் கே.எஸ், பாலாஜி ஆகியோர் வழக்கறிஞர்களாக ஆஜராகி வாதாடினர். இரண்டாவது குற்றவாளியாகக் கருதப்பட்ட காசிராஜன் என்ற இராமலிங்கநாடாருக்கு ஆதரவாக ஏ.எஸ். இராமானுஜம்,. எஸ்.வி. தேசிகாச்சாரியார். எஸ்.பி.சிவசுப்பிரமணிய நாடார் ஆகிய வழக்கறிஞர்களும் மூன்றாவது குற்றவாளியாகக் கருதப்பட்ட ஏ.எஸ். பெஞ்சமினுக்கு ஆதரவாக | ஏ.எஸ், இராமானுஜம். எஸ்.வி. தேசிகாச்சாரியார், எஸ்.பி. சிவசுப்பிரமணிய நாடார் ஆகிய வழக்கறிஞர்களும் நான்காவது குற்றவாளியாகக் கருதப்பட்ட ஆர்.செல்லத்துரைக்கு ஆதரவாக டேனியல்தாமஸ், எஸ்.பி. இராஜேந்திரன் ஆகிய வழக்கறிஞர்களும் ஐந்தாவது குற்றவாளியாகக் கருதப்பட்ட கே.பொள்னையா நாடாருக்கு ஆதரவாக ஏ.எஸ். இராமானுஜம், எஸ்.வி. தேசிகாச்சாரியார். எல்.பி. சிவசுப்பிரமணியநாடார் ஆகிய வழக்கறிஞர்களும், ஆறாவது குற்றவாளியாகக் கருதப்பட்ட பி.நாராயணப்பிள்ளைக்கு ஆதரவாக டேனியல் தாமஸ், எஸ்.பி. இராஜேந்திரன் ஆகிய வழக்கறிஞர்களும் ஏழாவது குற்றவாளியாகக் கருதப்பட்ட டி.தர்மம் கோயில்பிள்ளைக்கு ஆதரவாக ஏ.எஸ். இராமானுஜம், ‘ஏ.வி. தேசிகாச்சாரியார், கே.எஸ். பாலாஜி ஆகிய வழக்கறிஞர்களும் எட்டாவது குற்றவாளியாகக் கருதப்பட்ட ரெத்தினசாமி என்ற பெருமாள் நாடாருக்கு ஆதரவாக டேனியல்தாமஸ், எஸ்.பி.இராஜேந்திரன் ஆகிய வழக்கறிஞர்களும், ஒன்பதாவது குற்றவாளியாகக் கருதப்பட்ட மகாராஜநாடாருக்கு ஆதரவாக டேனியல் தாமஸ், எஸ்.பி.இராஜேந்திரன் ஆகிய வழக்கறிஞர்களும், பத்தாவது குற்றவாளியாகக் கருதப்பட்ட தேவயிரக்கம் நாடாருக்கு ஆதரவாக டேனியல் தாமஸ், எஸ்.பி. இராஜேந்திரன் ஆகிய வழக்கறிஞர்களும் பதினோராவது குற்றவாளியாகக் கருதப்பட்ட தங்கையா நாடாருக்கு ஏ.எஸ். இராமானுஜம். ஏ.வி. தேசிகாச்சாரியார். எஸ். பாலாஜி ஆகிய வழக்கறிஞர்களும் வாதாடினர்.
பன்னிரெண்டாவது குற்றவாளியாகக் கருதப்பட்ட ஆறுமுக நாடாருக்கு ஏ.எஸ். இராமானுஜம், ஏ.வி. தேசிகாச்சாரியார். வி.எஸ். சங்கரசுப்பிரமணிய முதலியார்ஆகிய வழக்கறிஞர்களும், பதிமூன்றாவது குற்றவாளியாகக் கருதப்பட்ட கனி நாடாருக்கு டேனியல் தாமஸ், எஸ்.பி. இராஜேந்திரன் ஆகிய வழக்கறிஞர்களும் பதினான்காவது குற்றவாளியாகக் கருதப்பட்ட செல்லத்துரைக்கு டேனியல்தாமஸ், எஸ்.பி. இராஜேந்திரன் ஆகிய வழக்கறிஞர்களும், பதினைந்தாவது குற்றவாளி நாராயணனுக்கு டேனியல் தாமஸ், எஸ்.பி. இராஜேந்திரன் ஆகிய வழக்கறிஞர்களும், 16வது குற்றவாளி நெல்லையப்ப சேர்வைக்கு ஏ.எஸ். இராமானுஜம், ஏ.வி. தேசிகாச்சாரியார், வி.எஸ். சங்கரசுப்பிரமணிய முதலியார் ஆகிய வழக்கறிஞர்களும், 17வது குற்றவாளி சிவந்திக்கண் என்ற முத்துமாலை நாடாருக்கு டேனியல் தாமஸ், செல்லப்பாண்டியன் ஆகிய வழக்கறிஞர்களும், 18வது குற்றவாளி தங்கச்சாமி நாடாருக்கு டேனியல் தாமஸ், செல்லப்பாண்டியன் வழக்கறிஞர்களும், 19வது குற்றவாளி மோட்டார் என்ற ரெத்தினசாமிக்கு டேனியல்தாமஸ், செல்லப்பாண்டியன் ஆகிய வழக்கறிஞர்களும், இருபதாவது குற்றவாளி பூவலிங்க நாடாருக்கு டேனியல் தாமஸ் செல்லப்பாண்டியன் ஆகிய வழக்கறிஞர்களும், 21வது குற்றவாளி லெட்சுமணனுக்கு டிஆர். கணபதிராமய்யா, டி.எம். சுப்பிரமணியன் ஆகிய வழக்கறிஞர்களும், 22வது குற்றவாளி தங்கையா என்ற ஆசிர்வாத நாடாருக்கு ஏ.எஸ்.- இராமானுஜம், ஏ.வி. தேசிகாச்சாரியார், கே.எஸ். பாலாஜி ஆகிய வழக்கறிஞர்களும், 23வது குற்றவாளி காசிநாடார் பாதுகாப்பு கைதியாக இருந்த காரணத்தினால் அரசு செலவில் டிவி. இராம்சேஷய்யர் வாதாடினார். 24வது குற்றவாளி துரைச்சாமி நாடாருக்கு வழக்கறிஞர் கே.எஸ். பாலாஜியும் 25வது குற்றவாளி லெட்சுமண நாடாருக்கு டேனியல் தாமஸ், செல்லப்பாண்டியன் ஆகிய வழக்கறிஞர்களும், 26வது குற்றவாளி வி.மந்திரக்கோனாருக்கு டேனியல்தாமஸ், செல்லப்பாண்டியன் ஆகிய வழக்கறிஞர்களும் கோர்ட்டில் ஆஜராகி வாதாடினர்.
நான்கு மாதங்கள் வழக்கு நடைபெற்றது. தீவிர விசாரணைக்குப் பின் 06.02.1943 அன்று சிறப்பு நீதிபதி ஓம்.பி.யூ பாலகிருஷ்ண அய்யர் தீர்ப்பு வழங்கினார். அவரது தீர்ப்பில் “இராஜகோபால், காசிராஜன், ஆகிய இருவருக்கும் தூக்குத்தண்டனையும் ஏ.எஸ். பெஞ்சமின், ஆர்.செல்லத்துரை, டி.தர்மம் கோயில்பிள்ளை, தங்கையா நாடார் சிவந்திக்கண்’ என்ற முத்துமாலை நாடார், மந்திரக்கோனார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், கே.பொன்னையா நாடார். ரெத்தினசாமி என்ற பெருமாள் நாடார். மகாராஜா நாடார். ஆறுமுக நாடார். கனி நாடார். செல்லத்துரை, நாராயணன், நெல்லையப்ப சேர்வை, தங்கச்சாமி நாடார். லெட்சுமணன், தங்கையா என்ற ஆசிர்வாத நாடார், ஆகியோருக்கு விடுதலையும் நாராயணபிள்ளைக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனையும், மோட்டார் என்ற ரெத்தினசாமி, பூவலிங்கம் நாடார் ஆகியோருக்குத் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குமாறும்” தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. (காசிநாடார் துரைச்சாமி நாடார், லெட்சுமண நாடார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் சிறைவாசலில் வைத்தே அவர்களைப் பாதுகாப்பு கைதியாக கைது செய்து விட்டனர்) தீர்ப்பு வெளியானதும் விடுதலைப் போராட்ட வீரர்களில் சிலரைத் தற்போதைய கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதி அலிபுரம் சிறையிலும், ஒரு சிலரை வேலூர் சிறையிலும் அடைத்தனர். இராஜகோபாலுக்கும் காசிராஜனுக்கும் விதிக்கப்பட்டத் தூக்குத்தண்டனையை ஆயுள்தண்டளையாக மாற்ற வேண்டுமென வீரர்கள் பலர் கருதினர்.
இந்நிலையில் முன்பு காவல் கைதியாக இருந்து பின்னர் விடுதலையாகியிருந்த தூத்துக்குடியைச் சார்ந்த கிட்டு என்றழைக்கப்படும் வெங்கடகிருஷ்ண ஐயரை லோன்துரை கொலைவழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த இராஜகோபாலனின் சித்தப்பா சிவலிங்க நாடார் சந்தித்தார். அவர் கிட்டுவைச் சென்னையில் சந்தித்த போது முதுபெரும் தியாகி மு.சி. வீரபாகு அவர்களிடமிருந்து ஒரு சிபாரிசுக் கடிதமும் பெற்று வந்திருந்தார்.
( அந்த கடிதத்தில் என்ன இருந்தது)


