செய்துங்கநல்லூார் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா மாநில விரிவாக்கத் திட்டத்தின் கீழ் கருங்குளம் கிராமத்தில் கலாஜாதா என்ற கிராமிய கலை நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுக்கான தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மை திட்டங்களுக்கான விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடத்தப்பட்டது.நிகழச்சிக்கு கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் தலைமை தாங்கி வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் கருங்குளம் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் உதயசங்கர் கலைநிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். திருச்செந்தூர் அக்னி குஞ்சுகள் கலைக்குழுவினர் விவசாயிகளுக்கான திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு
பிரசாரம் செய்தார்கள்.கலைநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ரகுநாத், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜேசுதாசன், உதவி தொழில்நுட்ப மேலாளர் பகவதி குமார் ஆகியோர் செய்திருந்தனர்.