கோவில்பட்டியில் பணியில் இருந்த பெண் காவலரை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் தெரு சந்திப்பில், போக்குவரத்து பிரிவு பெண் காவலர் இந்திராகாந்தி நேற்று பணியில் இருந்தார். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த மாணிக்கராஜா என்பவர் செல்போனில் பேசியபடி பைக்கை ஓட்டி சென்றாராம்.
இதைக் கண்ட பெண் காவலர் இந்திரா காந்தி அவரை நிறுத்தி, செல்போனில் கொண்டு பைக்கை ஓட்டாதீர்கள் என அறிவுறுத்தினாராம். அப்போது மாணிக்கராஜா, அவரை அவதூறாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து மாணிக்கராஜாவை (45) கைது செய்தனர்


