தூத்துக்குடி சிவன் கோவிலில் மின்தடை காரணமாக பக்தர்கள் அவதி அடைந்தனர். இதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் பிரசித்திபெற்ற சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடன் உறைஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் இன்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சார தடை ஏற்பட்டது. ஜெனரேட்டர் இருந்தும் பயன்படுத்த முடியவில்லை சாமி தரிசனம் செய்ய முடியாமல் மற்றும் குழந்தைகள் முதியவர்கள் அவதி அடைந்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராகவேந்திரா வலியுறுத்தியுள்ளார்.


