சல்மான் கான் (டிசம்பர் 27, 1965) ஒரு பிரபல இந்திய திரைப்பட நடிகரும், பாலிவுட் நடிகருமாவார்.
பீவி ஹோ தோ ஐசி என்ற திரைப்படத்தில் அறிமுகமான கான், மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற மைனே பியார் கியா மூலம் இந்தி திரைப்படத்துறையில் களமிறங்கினார். அத்திரைப்படத்தில் அவரின் நடிப்பிற்காக சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் அவர் வென்றார். சாஜன் ஹம் ஆப்கே ஹே கோன் , பீவி நம்பர் 1 போன்ற பாலிவுட்டின் மிகப் பெரிய வெற்றிப் படங்களும் அவரை இந்திய திரைப்படத்துறையில் நிலைநிறுத்தி உள்ளன.
1999ல், குச் குச் ஹோதா ஹே திரைப்படத்தில் தம் சிறப்பான நடிப்பிற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்ற கான், அப்போதிருந்து ஹம் தில் தே சுக்கே சனம், தேரே நாம், நோ என்ட்ரி மற்றும் பார்ட்னர் உள்பட பல சிறந்த மற்றும் வர்த்தகரீதியாக வெற்றி பெற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த வெற்றிகள் சல்மான் கானை இந்தி சினிமாவின் மிகப் புகழ்வாய்ந்த முன்னணி நடிகர்களில் ஒருவராக அவரை நிலைநிறுத்தியது.


