தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தமிழக துணை முதல்வரும், தி.மு.க மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே பொதுக்குழு உறுப்பினரும், மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி கேக் வெட்டினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர அயலக அணி அமைப்பாளர் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், நிர்மல்ராஜ், பாலகுருசாமி, மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருக இசக்கி, சுற்றுச்சூழல் மாநகர துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங், மாநகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், சரவணகுமார், ஜான் சீனிவாசன், மகளிர் அணி அமைப்பாளர் கவிதா, முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், வட்டச் செயலாளர்கள் ரவீந்திரன், பொன்ராஜ், சுரேஷ், ஜெபசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்


