தூத்துக்குடியிலுள்ள வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாமை ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணிகள் 2024 நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்டவை மேற்கொள்வதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று முன்தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
நேற்று மீண்டும் சிறப்பு முகாம்கள் நடந்தன. இதில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு மனுக்கள் பெறப்பட்டன. இந்த பணிகளை ஆட்சியர் லட்சுமிபதி நேற்று ஆய்வு செய்தார். அவர் தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி, சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடந்த முகாமை நேரில் பார்வையிட்டு, அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.


