நாலுமாவடியில் நடந்த திறப்பின் வாசல் ஜெபக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமையன்று திறப்பின் வாசல் ஜெபம் நடைபெறும் வழக்கம். அதேபோல் இந்த மாதமும் நேற்று ( சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை திறப்பின் வாசல் ஜெபக்கூட்டம் நடந்தது.
இயேசு விடுவிக்கிறார் ஜெபக்குழுவினர் பாடல்கள் பாடினர். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தேவசெய்தி கொடுத்து, தேசத்தின் மக்களுக்காகவும், வியாதியஸ்தர்களுக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். இதில் திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார் மற்றும் ஜெபக்கு ழுவினர் செய்திருந்தனர்.


