தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.
திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் பழைய பேருந்து நிலையம் அருகே கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். விழாவில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


