தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி விளாத்திகுளம் கிளை சார்பில் கிழிந்த அழுக்கடைந்த ரூபாய் நோட்டுக்கள் மாற்றும் முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி விளாத்திகுளம் கிளை சார்பில் விளாத்திகுளம் எட்டையாபுரம் ரோட்டில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் இன்று வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நாணய திருவிழா மற்றும் கிழிந்த அழுக்கடைந்த ரூபாய் நோட்டுக்கள் மாற்றும் மாற்றும் முகாம் நடைபெற்றது.
இதில் விளாத்திகுளம் புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள மக்கள் இதில் கலந்துகொண்டு அழுக்கடைந்த, கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றி பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாகம் சார்பில் கிளை மேலாளர் கதிரேசன், மண்டல தலைமை மேலாளர் இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர்.


