தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு அணியின் கூட்டம், அணியின் தலைவர் ராஜா ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட அணியின் அமைப்பாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். அணியின் துணை அமைப்பாளர் புதியம்புத்தூர் ஞானதுரை வரவேற்று பேசினார். கூட்டத்தில் துணை அமைப்பாளர்கள் ஏகே கமால்தீன், தெற்கு ஆத்தூர் பேரூராட்சி தலைவர் மற்றும் ஜாபர் சாதிக், ரெம்சியூஸ், முதலூர் டேனியல் ராஜன், குரும்பூர் தமீம் அன்சார் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். துணை அமைப்பாளர் ஏ கே கமால்தீன் நன்றி கூறினார் .
தூத்துக்குடியில் சிறப்பாக செயல்படும் கனிமொழி கருணாநிதி எம்பியை அணியினர் யாவரும் மரியாதை நிமித்தம் சந்திக்க வேண்டும், முதல்வரின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தும், நீட் விலக்கு நமது இலக்கு 50 லட்சம் கையெழுத்துக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்க்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து மற்றும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


