தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பாக ‘கலைஞர் நூற்றாண்டு விழா” ’உலக சுற்றுலா தினம் மற்றும் ‘தூய்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ” மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமை வகித்தார். இதில், கல்லூரி மாணவ/மாணவியர்களிடையே ‘சுற்றுலாவும், பசுமை முதலீடுகளும்” என்ற தலைப்பின் கீழ் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு வ.உ.சி. கல்லூரி கலையரங்கில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலர் சி.திருவாசன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். வ.உ.சிதம்பரனார் கல்லூரி முதல்வர் பேராசிரியர் வீரபாகு முன்னிலையில், வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் .தருமர் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் வரலாற்றுத்துறை இணை மற்றும் உதவிப் பேராசிரியர்கள், வரலாற்றுத்துறை மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, ‘கலைஞர் நூற்றாண்டு விழா”வினை முன்னிட்டு, பாஞ்சாலங்குறிச்சி, வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக்கோட்டையில் ‘தூய்மை விழிப்புணர்வு முகாம்” நடத்தப்பட்டது. இம்முகாமில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூhரின் வரலாற்றுத்துறை மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு கோட்டை வளாகத்தில் தூய்மைப் பணியினை மேற்கொண்டனர். இதில், தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலர் சி.திருவாசன், உதவி சுற்றுலா அலுவலர் ந.நித்தியகல்யாணி மற்றும் வ.உ. சிதம்பரனார் கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


