தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் “கடல் உணவுப் பொருட்களில் தொழில் முனைதல் இரண்டு நாள் தொழில்நுட்ப செயல் விளக்கப் பயிற்சி நடைபெற்றது.
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 25.07.2023 முதல் 26.07.2023 முடிய “கடல் உணவுப் பொருட்களில் தொழில் முனைதல்” என்ற இரண்டு நாள் தொழில்நுட்ப செயல் விளக்கப் பயிற்சியானது கீழக்கரையில் உள்ள தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 77 மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
இப்பயிற்சியானது சென்னையிலுள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு ஆணையத்தின் நிதி உதவியிடன் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் இயங்கி கொண்டிருக்கும் கடல்சார் உணவுப்பொருள் வணிக மையத்தின் வாயிலாக நடைபெற்றது. முனைவர் பா. கணேசன், உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர், மீன்பதனதொழில் நுட்பத்துறை பயிற்சியாளர்களை வரவேற்றார். இந்நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் அகிலன், துவக்கி வைத்து இப்பயிற்சியின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் தொழில் முனைவோர் பிரிவின் இயக்குனரான ரோசி பெர்னன்டோ பேசுகையில் இத்தொழில் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும், தொழில்முனைவோரை உருவாக்குவதில் பங்கு குறித்தும் விவரித்தார். இரண்டு நாள் பயிற்சியின் போது மாணவர்களுக்கு பல்வேறு மதிப்புக்கூட்டிய உணவுப்பொருட்கள் தயாரிப்பு மற்றும் பொதிகம் செய்வதில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் நிறைவு விழாவில் பங்குபெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்பயிற்சியினை உதவிப்பேராசிரியர் கணேசன் ஒருங்கிணைத்தார்.


