நாகலாபுரம், சாமி அய்யா நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை ஜி.வி. மார்கண்டேயன் எம்எல்ஏ வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட நாகலாபுரம், சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி, பள்ளி நிர்வாக குழு தலைவர் தங்கமணி, உறுப்பினர் மாரிக்கண்ணபிரான், உறவின் முறை தலைவர் காசிராஜன், முதுகலை இயற்பியல் ஆசிரியர் ஆறுமுகச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் புதூர் ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மும்மூர்த்தி, பேரூர் கழக செயலாளர் மருதுபாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரக்கனி காளிமுத்து, மாவட்ட பிரதிநிதிகள் காளிமுத்து, முருகேசன், ராமலிங்கம், ஒன்றிய பிரதிநிதி ராஜ்(எ) கருப்பசாமி, கிளைச் செயலாளர்கள் செந்தில்வேல், கிளாடியான், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கனகஜோதி சௌந்தர பாண்டியன், திமுக தகவல் தொழில் நுட்பஅணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


