செய்துங்கநல்லூர் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நடவடிக்கை.
கடந்த 24.05.2024 அன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளம் புதிய பாலம் அருகே வந்து கொண்டிருந்த ஒருவரிடம் தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் கண்ணன் (எ) கந்தசாமி (25) என்பவரை செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கண்ணன் (எ) கந்தசாமி மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் இன்னோஸ்குமார் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் கண்ணன் (எ) கந்தசாமி என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் இன்னோஸ்குமார் சம்மந்தப்பட்ட எதிரியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.


