ஏரல் விஸ்வகர்மா கலை வளாகத்தில் இலக்கியப்படைப்பாளர்களுக்கு பாராட்டு மற்றும் விருது வழங்கும் இரண்டாம் ஆண்டு விழா நடைபெற்றது
விழா தொடக்கமாக சென்னை பாவலர் கீர்த்தி மற்றும் மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார் . ஏரல் முன்னாள் கவுன்சிலர் இரட்டைமுத்து அவர்கள் தலைமை ஏற்றார்முஸ்லிம் வணிக சங்க முன்னாள் தலைவரும் காங்கிரஸ் பிரமுகருமான பாக்கர் அலி , நகைமதிப்பீட்டாளர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் ஏரல்ராஜன் வரவேற்றார். வழக்கறிஞர்கணபதி சுப்பிரமணியன், தாமிரபரணி இலக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளர் இசைக்கும்மணி ஆகியோர் அறிமுக உரையாற்றினர். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற பொறுப்பாளர்கள் நடராஜன் , சங்கரநாராயணன் வாழ்த்துரை வழங்கினர். தென் மாவட்ட வரலாற்று எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு , தொடுவானம் இலக்கிய சிற்றிதழ் ஆசிரியர் நெல்லை தேவன், சுசீந்திரம் புலவர் இராமசாமி, பன்முக எழுத்தாளர் நெல்லை செல்வம் , ஓவியர் கவிஞர் அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர் நெல்லை தங்கவேல் ஆகிய ஐந்து படைப்பாளிகளுக்கும் தாமிரபரணி இலக்கிய பேரவை சார்பில் ரூபாய் ஆயிரம் (1000) பொற்கிழியோடு படைப்பாளுமை விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
விழாவில்அரசு கண் பரிசோதகர் ஆசைத்தம்பி,தூத்துக்குடி சமூக ஆர்வலர் மாரியப்பன்,
மும்பை தூரிகை ஆசிரியர் முத்து,தேரிக்காட்டு இலக்கியவாதி ஆறுமுகபெருமாள்,
கவிஞர் தேவதாசன்,நெல்லை பாடகர் சுப்பையா,நெல்லை செல்லப்பா,ஆத்தூர் கவிஞர் அப்துல் ஹமீது,கவிஞர் வீடியோ மணி, கணேசன், கலர்மணி,சிறுத்தொண்டநல்லூர் ரமேஷ், செல்வம், கொற்கை மகாராஜன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
யோகா ஆர்வலர் தென்கரை மகாராஜன் நன்றியுரை ஆற்றினார்.
விழா ஏற்பாடுகளைதாமிரபரணி இலக்கியப் பேரவை ஒருங்கிணைப்பாளர்மற்றும் சென்னை பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகத் தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் இசைக்கும் மணி ,ஏரல் விஸ்வகர்மா பேரவை பொறுப்பாளர்கள் தென்கரை மகாராஜன், கவிஞர் ஏரல் ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.


