நாட்டார்குளம் மற்றும் செய்துங்கநல்லூரில் இயங்கி வரும்ஜோஸ் மெட்ரிக்பள்ளியில் பட்ட மளிப்பு விழா நடந்தது. பாளை கிருஷ்ணாபுரம் பாலன் மகாலில் நடந்த இந்த விழாவிற்கு பள்ளி முதல்வர் ஜெய்துன்பீவி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் தூத்துக்குடி மாவட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் டாக்டர் நிஷா கலந்துகொண்டு பள்ளிமாணவ மாணவிகளுக்கு பட்டமளித்தார். அதன் பின் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் 9 வது வகுப்பு மாணவன் அந்தோணி வரவேற்றார். ஜெய செல்வி, பாசில்லா, ஆகாஷ், செல்வ விஷ்வா, கருப்பசாமி ஆகியோரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 8 ம் வகுப்பு மாணவி அமீரா மிசர் நன்றி கூறினார். பள்ளி மாணவ மாணவிகளின் தனித்திறமை பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்கள் பாராட்டினார்கள்.


