மீரான்குளம் பொதுமக்கள் சார்பில் ஆழ்வார்திருநகரி மேற்கு வட்டாரம் மீரான்குளம் கிராமத்தில் மாவட்ட அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது. இதில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி. அமிர்தராஜ், சார்பில் முதல் பரிசு தொகை மற்றும் வெற்றிக் கோப்பையை வழங்கப்பட்டது. இந்த பரிசளிப்பு விழாவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் சங்கர், ஆழ்வார்திருநகரி மேற்கு வட்டார தலைவர் கோதண்டராமன், கருங்குளம் வட்டார தலைவர் புங்கன், ஆழ்வார்திருநகரி மேற்கு வட்டார பொருளாளர் பால்ராஜ், ஆழ்வார்திருநகரி மேற்கு வட்டார காங்கிரஸ் செயலாளர் சேகர், ஆழ்வார்திருநகரி மேற்கு வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர் கிறிஸ்டோபர், தூத்துக்குடி தெற்கு காங்கிரஸ் கமிட்டி RTI மாவட்ட தலைவர் ஜெபஸ் பிளஸ்வின், தூத்துக்குடி தெற்கு மாவட்ட ராகுல்-பிரியங்கா பேரவை பொருப்பாளர் பாஸ்கர், தேர்கன்குளம் இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவபெருமாள், பெருமாள்குளம் வடிவேல் மற்றும் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


