1. குறிப்பாக இசக்கியம்மன் கோயில் படித்துறையின் மேல்பகுதியில் 80 ஆண்டு மருதமரங்களின் மீது
வெள்ளக் கசடுகள் 10 அடி உயரத்திற்கு தேங்கி உள்ளது. காய்ந்த சருகு கசடுகள் மீது நெருப்பு பட்டால் மரங்கள் பட்டுபோய்விடும். எனவே மரங்களை விட்டு சருகுகளை அப்புறப்படுத்தும் பணி
நடைபெற்றது.
2. படித்துறையின் கீழ் பகுதியில் 70 ஆண்டு மருதமரங்களில் சேர்ந்த கசடுகளை யாரோ தீ வைத்ததின் விளைவு பாதிப்படைந்து உள்ளது. அதைசீரமைக்கும் பணி மேற்கொண்டு, கசடுகள் அகற்றப்பட்டது.
3. ஆற்றுப் பாலத்திற்கு கிழக்கே வெள்ளத்தில் தேங்கிய துணிகள், பாட்டில்கள் என எடுத்து அப்பகுதி தூய்மை செய்யப்பட்டது.
4. இன்று செவ்வாய்கிழமை இசக்கியம் கோயிலில் திரளாக கூடியிருந்த பக்தர்களிடம் தாமிரபரணி குறித்த விழிப்புணர்வும், வெளியூர்காரர்களிடம் ஆழமான பகுதிக்குச் சென்று குளிக்காமல் கரையோரம் பாதுகாப்பாக
குளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது
இப்பகுதியில் நாளையும், நாளை மறுநாளும் மேற்கண்ட பணிகளை நடத்தி முழுமையாக வெள்ளக் கசடுகளை அகற்றி இப்பகுதி மரங்களைக்காப்பாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. காரணம் மரங்கள்பக்தர்களுக்கு நிழல் தருவது மட்டுமின்றி இம்மருத மரங்கள் அனேக பறவைகளுக்கு புகலிடமாய் அமைந்துள்ளது.
இன்றையப் பணிகளை
செல்லத்துரை, பாக்கியம், சுதர்சன் செய்தனர்.
இவர்களுடன்….
கிரிக்கெட்மூர்த்தி
Asst. Director of Statistics (Rtd)
விக்கிரமசிங்கபுரம்


