தூத்துக்குடி மாசிலாமணி பூங்காவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி 1ஆம் கேட் பரி.பேட்ரிக்ஸ் ஆலயத்திற்கு எதிரே உள்ள மாசிலாமணி பூங்காவை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், பூங்காவில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு தற்போதைய காலத்திற்கு மாற்றித் தருவதாக தெரிவித்தார். ஆய்வின்போது, திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் மரிய கீதா மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


