தூத்துக்குடியில் தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து 4வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி ராஜகோபால் நகா் பகுதியைச் சோ்ந்த தொழிலாளியான ஆனந்தசைரஸ் (45), வீட்டருகே வசித்து வரும் கருப்பசாமி என்பவருக்கும் இடையே கடந்த 17ஆம் தேதி தகராறு ஏற்பட்டதாம். கருப்பசாமி அளித்த புகாரின்பேரில், சிப்காட் போலீசார், அவரை கண்டித்தனராம். இதனால் மனமுடைந்த அவா் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாராம்.
பின்னா் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் கடந்த 22ஆம் தேதி உயிரிழந்தாா். இதையடுத்து, ஆனந்த சைரஸ் உயிரிழப்புக்கு போலீசார்தான் காரணம்; அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, 3ஆவது நாளாக உடலை வாங்க மறுத்து அவரது மனைவி, உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


