தூத்துக்குடி பியர்ல்சிட்டி பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் சாலை ஓரமாக உறங்கும் ஆதரவற்றோருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி போர்வைகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாநகர பகுதியில் இரவு நேரங்களில் ஆதரவற்ற முதியவர்கள், வீடு இல்லாதோர் சாலை ஓரத்தில் உறங்குகின்றனர். தற்போது அதிக அளவில் பனி பொழிவதால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பியர்ல்சிட்டி பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் போர்வைகள் வழங்கும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கி துவங்கி வைத்தார்.
மாவட்ட அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ், பியர்ல்சிட்டி பத்திரிக்கையாளர் சங்க செயலாளர் காட்சன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், வேம்படி இசக்கி அம்மன் கோவில், பனிமய மாதா கோவில், சிவன் கோவில் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் உறங்கும் முதியவர்கள் மற்றும் வீடு இல்லாமல் தங்கிய மக்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டது.


