‘வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டத்திற்கான 6 முக்கியத் தொழில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டி.சி.டபிள்யூ லிமிடெட் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் மூலம் மொத்தம் ரூ.3,323 கோடி முதலீட்டில் 3,256 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.
2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கிப் பயணிக்கும் வகையில் நடத்தப்படும் ‘வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாடு 2026’-ல், தூத்துக்குடி மாவட்டத்திற்கான 6 முக்கியத் தொழில் முதலீட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சியும் முதலீடுகளும்: தமிழக அரசின் ‘வெற்றி தமிழ்நாடு’ (Vettri Tamil Nadu) முன்னெடுப்பின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் கட்டமைப்புகளை விரிவுபடுத்தும் வகையில் 6 முன்னணி நிறுவனங்களின் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தூத்துக்குடி மற்றும் திருச்சி பகுதிகளில் மொத்தம் ரூ.3,323 கோடி முதலீட்டில் 3,256 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.
நிறுவனங்கள் வாரியான முதலீடு – வேலைவாய்ப்பு விவரங்கள்:
• சன்மார் குரூப் (தூத்துக்குடி): ரூ.1,950 கோடி முதலீடு | 950 வேலைவாய்ப்புகள்
• அல்லிகுளம் அர்கா எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (தூத்துக்குடி): ரூ.312 கோடி முதலீடு | 830 வேலைவாய்ப்புகள்
• கிங்ஸ் இன்ஃப்ரா வென்சர்ஸ் லிமிடெட் (தூத்துக்குடி): ரூ.311 கோடி முதலீடு | 536 வேலைவாய்ப்புகள்
• ரென்ஃப்ரா எனர்ஜி இந்தியா லிமிடெட் (தூத்துக்குடி & திருச்சி): ரூ.300 கோடி முதலீடு | 700 வேலைவாய்ப்புகள்
• டி.சி.டபிள்யூ லிமிடெட் (தூத்துக்குடி): ரூ.250 கோடி முதலீடு | 140 வேலைவாய்ப்புகள்
• அப்யோம் ஸ்பேஸ்டெக் பிரைவேட் லிமிடெட் (தூத்துக்குடி): ரூ.200 கோடி முதலீடு | 100 வேலைவாய்ப்புகள்
இந்த மாபெரும் முதலீட்டுத் திட்டங்களின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


