துத்துக்குடியில் சிட்டிங் வாலிபால் போட்டியில் வெற்றி மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் 16 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 200 மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகள் பங்கேற்ற சிட்டிங் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
விழாவில், மாவட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் துரைப்பாண்டியன், கேம்ஸ் வில்லே உரிமையாளர் ரைபின், ரோட்டரி சங்கத்தை சேர்ந்த இப்ராஹிம், விக்னேஷ் மற்றும் பகுதிச் செயலாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


