ஸ்ரீவைகுண்டம் அருகே தாய் கண்ணெதிரே 2 வயது பெண் குழந்தை வாய்க்கால் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரம் சுந்தரலிங்கம் நகரை சேர்ந்தவர் கோயில் பிள்ளை. இவரது மனைவி ரம்யா. இவர்களது 2 வயது பெண் குழந்தை கயல். இந்நிலையில் நேற்று மாலை ரம்யா அழுக்கு துணிகளை துவைப்பதற்காக அருகில் உள்ள வாய்க்காலுக்கு சென்றுள்ளார். இதனால் பெண் குழந்தை ரம்யாவையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார்.
பின்னர் வாய்க்கால் கரையில் குழந்தையை உட்கார வைத்துவிட்டு அவர் துணி களை துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை கயல் வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரம்யா கத்தி கூச்சலிடமே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தண்ணீரில் குதித்து குழந்தை கயலை மீட்டனர். இதையடுத்து உடனடியாக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர்.
இது குறித்து ஸ்ரீவை குண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து குழந்தை கயல் உடலை பிரேத பரிசோதனைக் காக பாளை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்ப வம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் கண்ணெதிரேகுழந்தை நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது


