அழகப்பபுரத்தில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் குரும்பூர் அருகே உள்ள அழகப்பபுரத்தில் மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டி 2 நாட்கள் நடக்கிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் 70 அணிகள் பங்கேற்கின்றன.
வீரபாண்டியன் உள்விளையாட்டு மைதானத்தில் நேற்று துவங்கிய முதல் நாள் போட்டியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளரும், ஆழ்வை யூனியன் சேர்மனுமான ஜனகர் தலைமை வகித்தார். விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பாக்கியராஜ் முன்னிலை வகித்தார்.
இதில் தாசில்தார் கைலாஸ் குமாரசாமி, அழகப்பபுரம் பஞ்., தலைவர் பூமாரி பாலமுருகன், திமுக வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், வார்டு உறுப்பினர் பாலமுருகன், ஒன்றிய பொருளாளர் பாதாளமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்


