தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் 2018-2020, 2019-2021 மற்றும் 2020-2022ஆம் கல்வியாண்டுகளில் இளங்கல்வியியல், முதுநிலை கல்வியியல், ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பினை நிறைவு செய்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 26.11.2023 அன்று பட்டமளிப்பு விழா நடத்தி அவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
பட்டமளிப்பு விழாவில் கல்லூரியின் முதல்வர் .த.கனகராஜ் வரவேற்புரை வழங்கினார். விழாவின் சிறப்பு விருந்தினராக பாரதிதாரசன் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் ப.மணிசங்கர் கலந்து கொண்டு 430 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில் ஆசிரியப்பணியின் சிறப்பு குறித்தும், கல்வியியல் துறை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் ஆசிரியர் மாணவர் நல்லுறவு குறித்தும், இந்தியர் என்பதில் ஒற்றுமையுணர்வோடு வாழ்வதன் அவசியம் குறித்தும் பாரதியை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் எனவும் தன் கருத்தினை பகிர்ந்தார்.
இப்பட்டமளிப்பு விழாவில் கல்லூரித் தலைவர் ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம், கல்லூரிச் செயலர் ஏ.பி.சி.வீ.சண்முகம், வ.உ.சிதம்பரம் கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு பங்கேற்றுச் சிறப்பித்தனர். கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை முதல்வர் தலைமையில் திறம்பட செய்தார்கள்.


