தூத்துக்குடியில் வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோவிலில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோவிலில் கடந்த 10 நாட்களாக தசரா திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று அம்மன் காலையில் வெள்ளை சாத்தியும், மாலையில் சிகப்பு சாத்தியும் சப்பரத்தில் எழுந்தருளினார். இரவு பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பித்தளை சப்பரத்தில் சிவன் கோவில் முன்பு எழுந்தருளி, தூத்துகுடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சப்பர பவனி நடைபெற்றது.
பின்னர் கோவிலை வந்தடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விழாவில், டிஏ சில்க்ஸ் அதிபர் டிஏ தெய்வ நாயகம், முத்தாரம்மன் கோவில் தலைவர் சோமநாதன் செயலாளர் சக்திவேல், பொருளாளர் திருச்சிற்றம்பலம், சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, அறங்காவலர்கள் பிஎஸ்கே ஆறுமுகம், முருகேஸ்வரி, மாரிமுத்து, சிவராம கிருஷ்ணன், டைகர் சிவா, ஆறுமுகம், வள்ளியம்மாள், திருச்சிற்றம்பலம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


