தூத்துக்குடி வாகைக்குளம் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி வாகைக்குளம் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் முதல் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மோட்டிவேஷன் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜார்ஜ் கிளிங்டன் தலைமை தாங்கினார். பிரபல மோட்டிவேஷன் பேச்சாளர் ஜெகன் பங்கேற்று நிகழ்ச்சி நடத்தினார்.
மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வலியுறுத்தும் வகையில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் தேசிய தலைவர்கள், வாழ்வில் போராடி வெற்றி பெற்றவர்கள் குறித்த வீடியோ தொகுப்புகளை வெளியிட்டார். மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்வுகளையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தினார். இந்நிகழ்வு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது.
இந்த ஊக்கப்படுத்துதல் நிகழ்ச்சி கல்லூரி மாணவ, மாணவியருக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. இந்நிகழ்வில் ஸ்காட் கல்வி குழுமம் இயக்குனர் மாணவர் சேர்க்கை முனைவர் ஜான் கென்னடி மற்றும் அனைத்து துறை தலைவர்களும் பேராசிரியர்களும் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை நிர்வாக மேலாளர் விக்னேஷ் செய்திருந்தார்.


