போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுவால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் இடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பேரணி நடந்தது.
இந்த கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லதா தலைமை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் அருள் ஜோசப் முன்னிலை வகித்தார். தொடர்ந்து மாணவர் மாணவர்களிடையே செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் இன்னோஸ் குமார் பேசுகையில், மதுவின் தீமைகள் குறித்தும் அதனை ஒழிப்பதில் மாணவ மாணவிகள் பங்கு குறித்தும் உரையாற்றினார்.
பின்பு அதனைத் தொடர்ந்து கருங்குளம் கிராமத்தில் மெயின் ரோடு மற்றும் வீதிகளை சென்று மதுவின் தீமைகள் குறித்து வராதீங்க மாணவ மாணவிகள் மற்றும் போன் சார் ஆசிரியர்கள் பேரணி நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் போலீசார், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்


