கோவில்பட்டியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த மோட்டார் பைக்கை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி போஸ் நகர் 4ஆவது தெருவைச் சேர்ந்த ஆறுமுகபாண்டி மகன் மணிகண்டன் (22). கட்டடத் தொழிலாளியான இவர், சம்பவத்தன்று இரவு பைக்கை வீட்டு முன் நிறுத்தியிருந்தார். அதை, நேற்று காணவில்லை. புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இந்நிலையில், போலீசாரின் வாகனச் சோதனையின்போது, பைக்கில் வந்த இளைஞர் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு கீழகாடுவெட்டி இந்திரா காலனி நடராஜன் மகன் சந்திரகுமார் (35) என்பதும், அது மணிகண்டனின் பைக் என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, பைக்கை மீட்டனர்.


