தூத்துக்குடி சிவன் கோவில் தேருக்கு கண்ணாடி கூண்டு அமைத்துத் தந்த அமைச்சர் மற்றும் மேயருக்கு இந்து முன்னணி நன்றி தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற ஸ்ரீபாகம்பிரியாள் – ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் திருத்தேர் பாதுகாப்பு கண்ணாடி கூண்டு அமைத்துத் தந்த அமைச்சர் பி.கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கும் இந்து முன்னணி சார்பாக மாவட்ட செயலாளர் ராகவேந்திரா நன்றி தெரிவித்துள்ளார்.


