தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில், பேரிடர் கால அவசர ஒத்திகை நடைபெற்றது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ பேரிடர் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார், கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, உதவி உறைவிட மருத்துவர் சூரிய பிரதிபா மற்றும் மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், செவிலிய மாணவியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டார்கள். இதில், தீயணைப்பு படை வீரர்கள், பேரிடர் கால மீட்பு ஒத்திகை நடத்தினர்.


