தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற திருத்தலங்கள் அமைந்துள்ளன. நவதிருப்பதி ஸ்தலங்கள் என்று அழைக்கப்படும் கோவில்களில் முதலாவதாகவும் சூரிய அம்சமாகவும் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் திருக்கோவில் விளங்குகிறது. மூலவர் ஸ்ரீவைகுண்டநாதன், தாயார் வைகுண்டவல்லி பூதேவி.
கள்ளபிரானாக காட்சிதரும் மூலவருக்கு சித்திரை பிரம்மோஸ்தவ விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் சுவாமி கள்ளபிரான் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், ஷேஷ வாகனம் என தினமும் பல்வேறு வாகனங்களில் ஏழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. 5 ம் திருநாளான நேற்று காலையில் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், ஆழ்வார்திருநகரி பொலிந்து நின்ற பெருமாள், திருப்புளியங்குடி காய்சினி வேந்தபெருமாள், நத்தம் எம் இடர்கடிவான், ஆகியோருக்கு சுவாமி நம்மாழ்வா£¢ மங்களாசாசனம் நடந்தது.
பின்னர் மாலையில் அனைத்து பெருமாள்களுக்கும் தாமிரபரணி நதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு திருமஞ்சனம் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று இரவில் குடைவரை பெருவாயிலில் அம்ச வாகனத்தில் எழுந்தருளியுள்ள சுவாமி நம்மாழ்வாருக்கு எதிர் சேவையாக பெரிய திருவடியான ஸ்ரீ கருடாழ்வார் வாகனத்தில் மீது ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகள்ளபிரான், ஆழ்வார்திருநகரி ஸ்ரீபொலிந்து நின்றபிரான், திருப்புளியங்குடி ஸ்ரீ காய்சினிவேந்த பெருமாள், நத்தம் ஸ்ரீ எம்இடர்கடிவான் ஆகியோர் காட்சி அளித்தனர்.. 4 கருடவாகனம் மற்றும் அன்னவாகனத்தில் நம்மாழ்வா£¢ திருவீதி புறப்பாடு நடந்தது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் நவதிருப்பதி பெருமாளின் 4 கருடசேவையை ஒரே இடத்தில் கண்டு மகிழ்ந்தனர்.


