மனித நேயம். தெய்வீகம் நிறைந்த நம் தமிழ்நாட்டில் குவிந்து கிடந்த வளங்களையும் உழைப்பையும் தங்களுடைய வியாபாரத் தந்திரத்தால் சுரண்டிப் பிழைக்க வந்த ஆங்கிலேயர். வியாபாரி போல தங்களுடைய வலுவான காலை சொர்க்கபுரியான இந்தியாவில் வைத்தனர். அக்காலத்தில் அரசாண்டு வந்த மன்னர்களிடையே ஒற்றுமையில்லை. மக்களிடையேயும் ஜாதி பொருளாதார ஏற்றத்தாழ்வுகளாலும் சண்டை சச்சரவுகள் மேலோங்கி இருந்தன. இதனைக் கண்டு கொண்ட ஆங்கிலேயர் லஞ்சம் கொடுத்து பிரித்தாளும் சூழ்ச்சியால், நமது நாட்டை கையகப்படுத்தத் தொடங்கினர். நம்முடைய விரல்களைக் கொண்டே நமது கண்களை குத்திக் குருடாக்கின.
பிழைக்க வந்த ஆங்கிலேயரின் அடக்குமுறை. சொந்த நிலத்திற்கு வந்தவனின் வரி விதிப்பு. கொதித்தெழுந்தனர். தமிழகத்து பாளையக்காரர்கள் முதல் குரல் கொடுத்தனர். இதுதான் சுதந்திரப் போராட்டத்தின் முதல் விதை.
கர்நாடக உடன்படிக்கை மூலம் விதை இருந்து வரி வசூலிக்கும் அதிகாரம்
ஆங்கிலேயரை அடக்குமுறையின் உச்சகட்டத்திற்கு கொண்டு சென்றது. வாளை உயர்த்தியும் துப்பாக்கியைத் தூக்கியும் புரட்சிகள் வெடித்தன.
ஆங்கிலேயரின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்த முதல்
பாளையக்காரர் நம்முடைய ஒருங்கிணைந்த நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தின் “நெற்கட்டான்” செவ்வல் பூலித்தேவன் ஆவார்.
“வெள்ளையனே வெளியேறு ” என்று 1761 இல் வீரமுழக்கமிட்டவர். இந்தியாவின் முதல் விடுதலைப் போர்
என்று கூறப்படும் 1867 இல் நடைபெற்ற சிப்பாய் கலகத்திற்கும் முந்தைய பெருமைக்குரியவர்.
இவர் ஆங்கிலேயருக்கும் ஆற்காடு நவாபுக்கும் கப்பம் கட்ட மறுத்ததோடு, எதிர்த்துப் போரிட்டார். 1755 இல் கர்னல் எஹெரான் பூலித்தேவன் கோட்டையை முற்றுகையிட்டுகப்பம் கட்ட உத்தரவிட்ட போது அதனை எதிர்த்து போரிட்டு விரட்டி அடித்தார். அதே ஆண்டில் களக்காடு. நெற்காட்டான் செவ்வல் கோட்டையிலும் மாபூகானைத் தோல்வியடைச் செய்தார். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையில் ஆற்காடு நவாபு தம்பியையும், பௌட்சன் வாசுதேவநல்லூர் கோட்டையைத் தாக்கிய போதும் எதிர்த்து நின்று வெற்றி பெற்றாலும் 1767 இல் இவரது மறைவுடன் சுதந்திரப் போராட்டம் முடிவடையவில்லை
இவர் ஊன்றிய தன்மான விதை முளைத்து வளர்ந்தது. ஆங்கிலேயரின் சிம்ம சொப்பனம் பூலித்தேவன் என்றால் மிகையாகாது.


