பேட்மாநகரத்தில் ஹிஜாப் தடையை கண்டித்து பாப்புலர் ப்ரண்ட் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை கண்டித்து, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரத்தில்பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஸ்ரீவைகுண்டம் பகுதி தலைவர் அப்துல்காதர் தலைமை வகித்தார்.
எஸ்டிபிஐ கட்சி ஸ்ரீவை தொகுதி இணைச் செயலாளர் ஹாஜா நஜ்முதீன், கிளைத்தலைவர் ரிஸ்வான் மற்றும் ஜமாத்தார்கள் பொதுமக்கள், அனைவரும் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.


