வல்லநாட்டில் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு அகரம் அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடந்தது.
இதில் சின்ன மாட்டுவண்டி பந்தயம், பெரிய மாட்டு வண்டி பந்தயம், குதிரைப்பந்தையம் என மூன்று போட்டிகளாக நடந்தது. இந்த போட்டியில் 10 பெரிய மாட்டு வண்டிகளும், 24 சிறிய மாட்டு வண்டிகளும், 17 குதிரை வண்டிகளும் கலந்து கொண்டனர். இந்த போட்டி வல்லநாட்டில் இருந்து கலியாவூர் வரை அமைக்கப்பட்டிருந்து. பந்தயத்தில் கலந்து கொண்ட காளைகள் மற்றும் குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன.


