தூத்துக்குடியில் அஸ்ட்ரோ கிளப், வ.உ.சி அஸ்ட்ரோ கிளப் சார்பில் ஐந்திணை பூங்காவில் கோள்கள் திருவிழா நடைபெற்றது.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 2024 இடங்களில் மாணவர்கள்,பொதுமக்களிடம் வானியல் கருத்துக்களை பரப்பிட கோள்கள் திருவிழாவை நடத்தி வருகிறது.இதில் தூத்துக்குடியில் நடந்த கோள்கள் திருவிழாவில் மூன்று லட்சத்து என்பதாயிரத்து நானூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிலாவில் உள்ள மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் டெலஸ்கோப்பில் கல்லூரி, பள்ளிமாணவர்கள் . பொதுமக்கள் 1000 பேர் கண்டு ரசித்தனர்.
இதில் டாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் முனைவர் முத்துசாமி வன்னியப்பன்,தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் சம்பத்சாமுவேல், வ.உ.சி அஸ்ட்ரோ கிளப் நிர்வாகிகள் முனைவர் ப்ரின்ஸ் ,உதவி பேராசிரியர் கிருஷ்னா, உள்பட மாணவ உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


