தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் 76ஆவது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் 76 ஆவது குடியரசு தினவிழா நடைபெற்றது. வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ் நாயர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் தனது குடியரசு தின உரையில் வங்கியின் பெருமைமிகு வாடிக்கையாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அனைத்து உடமைதாரர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும், அவர் தனது உரையில், புதுமையான தொழில் நுட்பங்கள் மற்றும் செயல் முறை மாற்றங்களை புகுத்தி, வங்கி, எந்த மாதிரியான சவால்களையும் எதிர்கொள்ளும் வலுவுடன் வளர்ச்சிப் பாதையில் செல்ல ஆயத்தமாக இருப்பதாக தெரிவித்தார். விழாவில் வங்கியின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


